Posts

Showing posts with the label kavithai

காகிதமாய்.....

Image
வெற்று காகிதமாய் இருக்க ஆசை.... மற்றவர் கனவுகளால் தவிக்காமல்... எவர் வார்த்தைகளையும் சுமக்காமல்... அடுத்தவர் பொழுதுபோக்குக்கு கதையாகாமல்.. நானாய் இருக்க ஆசை.. வெற்று காகிதமாய்...
Image
கரைகாண காதலோடு கல்யாண                வாழ்க்கை... எதிர்தோரை எல்லாம் எதிர்த்துவிட்டு எனக்காய்            ஒரு வாழ்க்கை... கனவுகளின் நிதர்சனத்தை     ஏற்றுக்கொண்டு செல்கையில் ஏதோ ஒரு மாற்றம் என்னில்      சில தடுமாற்றம்... அலட்சிய படுத்திய நிகழ்வெல்லாம்      அடுத்தொருவருக்கு அரங்கேறையில்       ஆதங்கம் புரிகிறதோ மனதுக்கு... ஒதுக்கியது எதுவும் ஒதுங்கவில்லையோ... ஏந்திழையின் ஏக்கமும் தீரவில்லையோ... இறைவா....    தவறுகளுக்கான தண்டணை என்றறிந்தும்    தவிக்கின்ற மனதுக்கு ஆறுதல் தா...

மாறாதோ........

Image
நிமிஷங்கள் எல்லாம் நினைவுகளாய் மாறின...... வருஷங்கள் எல்லாம்  வார்த்தைகளாய் மாறின...... இரு விழி பார்வைகள் கூட வாசலாய் மாறின...... ஆனால்  உன் மனது மட்டும் என்  காதலை ஏற்காதோ..... உன் நினைவுகள் அனைத்தும்  நானாக மாறாதோ......

நீ இருந்தால்

Image
மழையின் சாரல் மகிழ்ச்சியின் தூரல் நீ இருந்தால்....... மழலையின் சிரிப்பு மனதினில் தவிப்பு நீ இருந்தால்....... இயற்கையின் வனப்பு இதயத்தில் தவிப்பு நீ இருந்தால்.......

உன் நினைவு.......

Image
ஓர் இரவில்... உன் நினைவுகளோடு நிலவை பார்த்திருந்தேன். நிலவு கேட்டது " என்னை மறந்து எதை நினைக்கிறாய்....? " என்று. எப்படி சொல்வேன் " நான் என்னையும் மறந்து உன்னை நினைக்கிறன்.....! " என்று.

ரகசியத்தை சொல்லிவிடு

இரத்தம் கூட பாயாத பகுதியில் நீ எப்படி...? காற்று கூட பார்த்ததில்லை என்று கர்வம் கொண்டேனே அதில் உன் கால்தடம் எப்படி...? ஊசி நிற்கும் அளவு கூட வெற்றிடம் இல்லையே பின் உன் உருவம் எப்படி...? என் இதயத்தில்............! அந்த ரகசியத்தை சொல்லிவிடு.....!